கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதி,  தமிழகத்தில்    ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

அமராவதி அணை (திருப்பூர்) 12, பழனி (திண்டுக்கல்) 11, திருமூர்த்தி IB (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 10, திண்டுக்கல் (திண்டுக்கல்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்) தலா 9, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 8, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7, பாம்பன் (ராமநாதபுரம்) 6, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), உப்பாறு அணை (திருப்பூர்), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 5, ஆழியார் (கோயம்புத்தூர்), கடலாடி (ராமநாதபுரம்), கின்னக்கோரை (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 4, கொடைக்கானல் (திண்டுக்கல்), குன்னூர் PTO (நீலகிரி), கமுதி (ராமநாதபுரம்), பெரியகுளம் (தேனி), மஞ்சளாறு (தேனி), தாராபுரம் (திருப்பூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), திருப்பூர் PWD (திருப்பூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), நிலக்கோட்டை (சென்னை), கோடநாடு (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை), கமுதி ARG (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்), குன்னூர் (நீலகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), தேக்கடி (தேனி), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

10.01.2024 மற்றும் 11.01.2024: தமிழக   கடலோரப்பகுதிகள்,    மன்னார்    வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.01.2024: குமரிக்கடல் பகுதிகள்,  மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Source link

Latest News

View All

1. Принимаем заявки круглосуточно, уточняем состояние и подбираем безопасный формат помощи. Ознакомиться с деталями – [url=https://nnarkologicheskaya-klinika-v-kemerovo18.ru/]наркологическая клиника лечение алкоголизма в Кемерово[/url]

2. Эта информационная публикация освещает широкий спектр тем из мира медицины. Мы предлагаем читателям ясные и понятные объяснения современных заболеваний, методов…

3. Состояние пациента отслеживается на каждом этапе, от первичной консультации до дальнейших рекомендаций. Узнать больше – [url=https://narkologicheskaya-klinika-krasnodar1.ru/]http://narkologicheskaya-klinika-krasnodar1.ru[/url]

4. Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Дополнительная информация – [url=https://narkologicheskaya-klinika-moskva15-3.ru/]наркологическая клиника в москве[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed