திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்கள் பேருந்தை முற்றுகையிட்டு 2வது நாளாக போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
 
தமிழகத்தில் ஜன.9-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் தொழிற்சங்கங்கள் 8 தேதி நள்ளிரவு முதலே வேலை நிறுத்தம் நடைபெற துவங்கி உள்ளது.
 

 

திருவண்ணாமலை  மாவட்டத்தின் நிலை என்ன ?
 

இந்த நிலையில்,போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை  மாவட்டத்தில் மொத்தம் 10 பணிமனைகள்  உள்ளது அதில்  சுமார் 850 பேருந்துகள் உள்ள நிலையில் போக்குவரத்து ஊழியா்களான டிரைவா், கண்டக்டா் உட்பட சுமாா் 700 போ் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனா். பின்னர் நேற்றைய தினம் அரசு பேருந்துகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கம்போல் இயங்கின. இதில் அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியா்களான டிரைவா், கண்டக்டா் திருவண்ணாமலை, வந்தவாசி , செங்கம் , ஆரணி , செய்யார் உள்ளிட்ட பகுதிகளில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தவித பாதிப்புகளின்றி அரசு பேருந்துகள் வழக்கத்தை போல் 95% சாதிவிதம் பேருந்துகள் இயங்கியதாகவும், இதனால் பயணிகள் யாரும் சிரமம் இன்றி பேருந்தில் தங்களுடைய சொந்த உறவுகளுக்கு சென்றதாகவும் அரசு  போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 
 
 

 
 
இரண்டாவது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
 
இரண்டாவது நாளாக இன்று அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் திருவண்ணாமலை தேனிமலை பணிமனையில் அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியா்களான டிரைவா், கண்டக்டா் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் சிஐடியு  பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்தை திடீரென வழி மறித்து சாலை அமர்ந்து சாலைமறியலில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்குமேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Source link