புது பொலிவுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம்.. வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடக் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், வருகின்ற 26ம் தேதி சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் வரும் 26ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
கலைஞர் கருணாநிதி நினைவிடம்: 
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார். தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்தது. இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அப்போது, விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, ” முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும். மேலும், அவரது சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்” என்றார்.
அதன்படியே, கடந்த 2021ம் ஆண்டு முதல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூபாய் 39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து,  அவரது சிந்தனைகள், சிந்தாந்தங்கள், சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டது. தற்போது வருகின்ற 26ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

மேலும் காண

Source link