PM Modi Visit Rameswaram Ban On Sami Darshan North Indians Devotees Suffer – TNN | PM Modi Visit Rameswaram:ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகையால், ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கும் சாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வழக்கம் போல ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், ஏராளமானோர் அங்கு தங்கும் விடுதிகளிலும் தங்க இயலாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளார். இதையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆன்மீக பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 2.05 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, ராமேசுவரம் மாதா அமிர்தானந்தமயி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு இன்று பிற்பகல் 2.05 மணிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ராமநாத சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர், பகல் 2.45 மணிக்கு அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுவார் என கூறப்படுகிறது
தொடர்ந்து, ராமேசுவரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கோயிலில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், இரவு ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார் என சொல்லப்படுகிறது.

நாளை (ஜன.21) காலை 8.55மணிக்கு ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்லும் பிரதமர், அங்குகாலை 9.30 முதல் 10 மணி வரை தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார். பின்னர், காலை 10.30 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். காலை 11.05 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் திரும்பி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, விமானம் மூலம்பிற்பகல் 12.35 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் 2.30 மணிவரையிலும், நாளை காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையிலும் ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமிகோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வழக்கம் போல ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக ஏராளமானோர் அங்கு தங்கும் விடுதிகளிலும் தங்க இயலாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்க்க வழி இல்லாமலும் தெருக்களில் சுற்றித் திரிகின்றனர்.

Source link