பசிக்கு உதவிய மூதாட்டிக்கு நேர்ந்த கதி… வீட்டுக்குள் புகுந்து 2 பேர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல்… கடைசியில் நடந்த‍து?

சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், பசிக்கு உணவு கேட்பது போல் நாடகமாடி, நகையை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலம் மகாதேவன் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. 76 வயதான இவர், கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 7ஆம்எ தேதி மதியம் மூதாட்டி பத்மாவதி வீட்டில் தனியாக இருந்த போது, 2 பேர் பேசியுள்ளனர். மூதாட்டியிடம் பசிக்கிறது, உணவு வேண்டும் என்று கேட்டு நாடகமாடி வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

மூதாட்டியும் பசிக்கு சோறு கேட்கிறார்களே என அனுமதித்த போது, தீடீரென கத்தியை காட்டி மிரட்டி, மூதாட்டியின் 6 கிராம் கம்மலை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அசோக் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய 2 நபர்களையும் தேடி வந்த‍னர்.

இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த தனிப்படை காவல்துறையினர், திருவொற்றியூரை சேர்ந்த தச்சு தொழிலாளி பாபு என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்

கைது செய்யப்பட்ட பாபுவிடம் நடத்திய விசாரணையில், பாபு மற்றும் கார்த்திக் இருவரும் குடிபோதையில் இருப்பவர்களிடம் பிக்பாக்கெட் அடித்து, அந்த பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்த‍து.

கடந்த 7 ஆம் தேதி 2 பேரும் தியாகராய நகருக்கு துணி எடுக்க சென்று விட்டு, பின்னர் மது அருந்திவிட்டு, மேற்கு மாம்பலம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது மூதாட்டி தனியாக இருப்பதைப் பார்த்து, அவரிடம் உணவு கேட்பது போல் நாடகமாடி கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பாபுவிடம் தலைமறைவாக உள்ள கார்த்திக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.