Tiruvannamalai District Environment Protection Green Champion Award Apply Immediately Date – TNN | பசுமை சாம்பியன் விருதுக்கு உடனடியாக விண்ணப்பிங்க


திருவண்ணாமலை (Tiruvannamalai News) பசுமை சாம்பியன் விருது 2023 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.
பசுமை சாம்பியன் விருது 2023 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 2023 ம் ஆண்டிற்கான, பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மறறும் வனத்துறையின் சார்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் அல்லது அமைப்புகளுககு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 இலட்சம் வீதம் பணமுடிப்பு வழங்க உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றம் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
 

 
விழிப்புணர்வை சிறப்பாக திருவணண்மலை மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுககு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மூன்று தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான, விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து விரிவான தகவல் மற்றும் விண்ணப்பபடிவங்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://tiruvannamalai.nic.in/) மற்றும் மாவட்டசுறறு சுழல்பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.04.2024 என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  தெரிவித்துள்ளார்.

Source link