Tamil Nadu latest headlines news April 5th 2024 flash news details know here


Vegetable Price: வீக் எண்டில் உயர்ந்த சேனைக்கிழங்கு, குடைமிளகாய் விலை.. மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ..
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க
MLA Pugazhendi Demise: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி திடீர் உயிரிழப்பு..!
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.  புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் படிக்க
CM MK Stalin: மீண்டு வருவார் என்று நம்பியிருந்தேன்.. புகழேந்தி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. மேலும் படிக்க
TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 106 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.மேலும் படிக்க
MDMK Election Manifesto: திருச்சியை மேம்படுத்த வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்த மதிமுக.. வெளியான தேர்தல் அறிக்கை..
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மேலும் படிக்க
MP P.Chidambaram: “பாஜகவை போல் முரண்பட்ட கூட்டணியில் திமுக காங்கிரஸ் இல்லை” – ப. சிதம்பரம்
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ காங்கிரஸ் மற்றும் திமுக முரண்பட்ட கூட்டணியை அமைக்கவில்லை.மேலும் படிக்க..

மேலும் காண

Source link