ஜாதி பெருமை பேசும் படங்கள்.. சிரிப்புதான் வரும் : கலாய்த்த இயக்குநர் பி.எஸ் மித்ரன்

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வானம் திரைப்படம் விழாவில் இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசியுள்ளார்

வானம் திரைப்பட விழா

இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் சென்னையில் வானம் திரைபடம் விழா வருடந்தோறும் ஒருங்கிணைக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தமிழில் வெளியான விடுதலை, மாமன்னன், விடுதலை உள்ளிட்டப் படங்கள் திரையிடப் பட்டன. மேலும் மலையாளம் , இந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில் சாதியை பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் பல்வேறு படைப்புகள் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட்டன. திரையிடல் தவிர தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுடன் சினிமா குறித்த விவாதங்கள் நடைபெற்றன. அந்த வகையில் சினிமாவின் நவீன் கருத்தாக்கங்கள் பற்றிய விவாதம் நேற்று 9 ஏப்ரல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சில்லுகருப்பட்டி பட இயக்குநர் ஹலிதா ஷமீம் , ஹீரோ, சர்தார் ஆகிய படங்களில் இயக்குநர் பி.எஸ் மித்ரன் , மலையாளத்தில் வெளியான ”தி கிரேட் இந்தியன் கிச்சன்” மற்றும் ”காதல் தி கோர்” பட இயக்குநர் ஜியோ பேபி மற்றும் யாத்திசை பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசியுள்ள கருத்துக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது,

என்னை பாதிப்பதை படமாக்குகிறேன்

தன்னுடைய படங்களுக்கான கதைகளை தேர்வு செய்வது குறித்து பேசும்போது “என்னை பாதிக்கும் விஷயங்களையும் நான் நேரடியாக பார்த்து பயப்படும் விஷயங்களையே நான் படமாக்குகிறேன். நான் ஒரு விஷயத்தைப் பார்த்து பயப்படுகிறேன் என்றால் அதேபோல் எல்லாரும் பயப்பட வேண்டும் என்று அதை படமாக எடுக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய செல்ஃபோனில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் போய்விட்டதாக ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜ் எனக்கு ஒரு பயத்தை உருவாக்கியது. அந்த பயம்தான் என்னுடைய முதல் படமான  இரும்புத்திரை படமாக மாறியது” என்று பி.எஸ் மித்ரன் கூறினார்.

சாதியப் பெருமை பேசும் படங்கள் குறித்து பி.எஸ் மித்ரன்

தற்போது தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தவை, பிடிக்காதவற்றைப் பற்றி இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசியபோது “என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை சினிமா எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. பரியேறும் பெருமாள் படம் பார்ப்பது வரை ஊர் பக்கம் சாதி பிரச்சனை இந்த அளவிற்கு இருக்கிறது என்று எனக்கு தெரியவே தெரியாது. என்னோட வாழ்க்கையில் நேரடியாக எனக்கு பெரியளவிலான அனுபவங்கள் கிடையாது. என்னுடைய அரசியல் அறிவை தூண்டுவதும் உருவாக்குவதும் சினிமாவாக இருக்கிறது.

அந்த வகையில் சினிமாவில் தீவிரமாக அரசியல் பேசும் ட்ரெண்ட் எனக்கு பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் நம்ம எவ்வளவு தீவிரமாக ஒரு அரசியலை பேசுகிறோமோ அதற்கு எதிராக ஒரு சிலர் படங்கள் எடுப்பது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் நான் அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு அப்படியான படத்தை எடுப்பதை பார்த்து எனக்கும் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. அந்த படங்களின் போஸ்டர் , டிரைலர் எல்லாம் பார்க்கும்போது சிரிப்பு அதில் எனக்கு உருவாகிறது” என்று அவர் கூறினார்.

Source link