ஷங்கர் மகள் திருமண நிகழ்வு
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரி மூத்த மகள் திருமணம் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோகித் என்பவருக்கும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்2ந்து ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா ஷங்கர். தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் என்பவருடன் தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் ஷங்கர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தவிர்த்து தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது
கில்லி பாடலுக்கு ரன்வீர் சிங் நடனம்
இந்த திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வரிசையாக வெளிவந்தபடி உள்ளன. தற்போது வெளியாகியுள்ள காணொலி ஒன்றில் இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் நடிகை அதிதி ஷங்கர் மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர் இருவரும் இணைந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கில்லி படத்தின் அப்படி போடு பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதிதி ஷங்கர்
Aditi Shankar And Arjith shankar Dancing At Shankar’s Daughter Wedding Reception ! @AditiShankaroflpic.twitter.com/nGDQ5OHvrr
— TamilaninCinema (@TamilaninCinema) April 16, 2024
விஜய் சேதுபதி நடித்த விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். தொடர்ந்து கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மாவீரன் படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
இந்தியன் 2
இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் படு பிஸியாக இருந்து வருகிறார். கமல்ஹாசன் , காஜன் அகர்வால், ரகுல் ப்ரீத் , சித்தார்த் ,பாபி சிம்ஹா , எஸ். ஜே சூர்யா , பிரியா பவாணி சங்கர் ஆகியோ இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது இந்திய 2 படம் . இந்தியன் 2 படத்தை அடுத்து ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.
மேலும் காண