vijay devarakonda mrunal thakur family star shoot wrapped


விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளது.
ஃபேமிலி ஸ்டார்
விஜய் தேவரகொண்டா  மற்றும் மிருணால் தாக்கூர் இணைந்து நடித்து வரும் படம் ஃபேமிலி ஸ்டார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை பரசுராம் இயக்குகிறார். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக சென்னையில் நடபெற்றது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு வீடியோ மூலம் அறிவித்துள்ளார்கள்.
முதல் முறையாக இணையும் விஜய் மிருணால்

விஜய் தேவரகொண்டா  சமந்தாவுடன் இணைந்து நடித்த குஷி படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படம் சுமாரான வெற்றிபெற்றது. விஜய தேவரகொண்டா நடித்து முன்னதாக வெளியான லைகர்  படமும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஃபேமிலி ஸ்டார் படம் அவருக்கு வெற்றிபடமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.  அதே நேரத்தில் மிருணால் தாக்கூர் நானி நடித்து கடந்த ஆண்டு வெளியானப் படம் ஹாய் நானா. இந்தப் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. சீதா ராமம் படத்தைப் போல் இந்தப் படத்திலும் மிருணால் தாக்கூரின் கதாபாத்திரம் பாராட்டப் பட்டது.
தென் இந்திய சினிமாக்களில் வளர்ந்து வரும் இரு நடிகர்களான இவர்கள் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இந்த இருவரின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்படம் தவிர்த்து இந்தியில் பூஜா மெரி ஜான் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மிருணால் தாக்கூர். இதுவரை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இடையிலான ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை அடித்துக் கொள்ள முடியாது என்பது ஒருபக்க ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் யார் கூட நடித்தாலும் மிருணால் தாக்கூர் மேஜிக் செய்துவிடக் கூடியவர் இந்தப் படத்திலும் அந்த மேஜிக் நடக்கும் என்று மற்றொரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

மேலும் படிக்க : Siragadikka Aasai:தெரிய வரும் உண்மை…ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!
Shanthi Williams: திருமணத்தன்று வீட்டை விட்டு ஓட்டம்.. அப்பாவால் சோகமாக மாறிய சாந்தி வில்லியம்ஸ் வாழ்க்கை!

மேலும் காண

Source link