rcb vs gt

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன.

இதில் இன்று (மே.26) நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பிய​னான ஆர்சிபி-யும், குஜராத் டைட்டன்ஸ் அணி​யும் மோதுகின்றன.

rcb vs gt

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஆர்சிபி கேப்டன், ரஜத் பட்டிதார், “எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் இருந்தாலும் எங்களது சிறந்த பங்களிப்பை வழங்கவே நாங்கள் முயற்சி செய்வோம்.

இறு​திப்​போட்​டிக்கு முன்னேறு​வ​தில் மட்​டுமே நாங்​கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழு​வதும் நாங்​களும், குஜ​ராத் அணி​யும் சிறப்​பாகச் செயல்​பட்​டுள்​ளோம்.

போட்டி நடை​பெறும் குறிப்​பிட்ட நாளில், எந்த அணி தங்​களது திட்​டங்​களைச் சரி​யாகச் செயல்​படுத்துகிறதோ மற்​றும் அழுத்​த​மான சூழலில் பதற்றமடையாமல் நிதான​மாக இருக்​கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

பந்துவீச்சு தான் எங்களது பலம். நாங்​கள் ஆரம்​பத்​திலேயே விக்​கெட்​டு​களை வீழ்த்த முயற்சி செய்வோம். இது​வரை நாங்​கள் அதைத்​தான் செய்திருக்கிறோம். ஒரே விஷயத்தை மீண்​டும் துல்​லிய​மாக செய்​வது​தான் ஆட்​டத்​தின் முடி​வில் பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​தும்.

rcb
rcb

புவனேஷ்வர்​கு​மார் அனுபவம் வாய்ந்த பந்​து​வீச்​சாளர். அவருக்​குத் தனது பலம் என்னவென்று நன்​றாகத் தெரி​யும். அவர், அணி​யில் உள்ள இளம் பந்​து​வீச்​சாளர்​களிடம் பேசும் வித​மும், அணி​யில் அவர் இருப்பதும் எங்​களுக்கு மிகவும் முக்​கிய​மானது” என்று கூறியிருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed