Calling unknown woman darling is sexual harassment Calcutta High Court | Calcutta High Court: தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது பாலியல் துன்புறுத்தல்


Calcutta High Court: முன்பின் தெரியாத பெண்ணை ’டார்லிங்’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரபர கருத்து:
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு பணிக்காக மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் அங்கு சென்றார். பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மதுபோதையில் இருந்த ஜானக்ராம் என்பவர் பெண் போலீஸ் ஒருவரை ’டார்லிங்’ என்று  அழைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பான வழக்கும் கீழமை நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் ஜானக் ராமுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனையும். ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த சிறை தண்டனையை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஜானக் ராம் மனு தாக்கல் செய்தார்.
“டார்லிங் என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது”
இந்த மனு மீதான மீதான விசாரணை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜானக் ராமுக்கு விதித்த மூன்று மாதங்கள் சிறை தண்டனையை உறுதி செய்தார். அதோடு, முன்பின் அறியாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது.
மதுபோதையில் ஒரு ஆண் இருந்தாலும், இல்லாவிட்டாலும்,  தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது. மேலும், புண்படுத்தும் வார்த்தையாகும். சமூகத்தில் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி முன்பின் தெரியாத பெண்களை அழைப்பதற்கு அனுமதிக்காது.
எனவே, முன்பின் தெரியாத பெண்ணை ’டார்லிங்’ என்று அழைப்பது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 354A (ஒரு பெண்ணின் அடக்கத்தை மீறுதல்) மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ்  தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மனுதாரர் நிதானமான நிலையில் இருந்தால், குற்றத்தின் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கும்” என்று நீதிபதி கூறினார்.
எனினும், போர்ட் பிளேர் நீதிமன்றம் விதித்த 3 மாதங்கள் சிறை தண்டனையை ஒரு மாதமாக குறைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண் போலீஸிடம் டார்லிங் என்ற அழைத்தற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி கூறினார். இருப்பினும், ஜனக் ராம் இந்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து, கொல்கத்தா நீதிமன்றம் ஜனக் ராமுக்கு விதித்த மூன்று மாத சிறை  தண்டனையை ஒரு மாதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க
Abhijit Gangopadhyay: உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா? பாஜகவில் இணைகிறாரா ?

மேலும் காண

Source link