தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை,  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப்ரவரி 13 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இருப்பினும் பகல்  நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 31.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில்  36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல், குறைந்தபட்சமாக கொடைக்காணலில் 18.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed