சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி மெகா ஹிட் ஆனது.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இப்போது எடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திரமுகி 2 படம், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லைகா டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.