கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகரின் மகள் வீடியோ மூலம் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன், தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே’ என்ற தொடரில் நடித்து வருகிறார். டான்ஸர், நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பிரபலமானவராக இருந்து வருகிறார்.
இவருடைய காதல் மனைவியான தீபாவும் சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நேத்ரன் – தீபா தம்பிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் அபிநயா சமீபத்தில் வெளியான `கனா காணும் காலங்கள்’ என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்நிலையில் அபிநயா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/C9pEj0-Sk2m/?igsh=MWNvYXllNTZuMW5wOA==
அதில், ‘எனக்கு இதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. கொஞ்ச வாரமாகவே ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க. அவருக்கு கேன்சர் பாசிட்டிவ். ஆனால், சர்ஜரி பண்ணிட்டாங்க’ என்று கூறியுள்ளார்.
‘கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்குன்னு மறுபடி ஐசியூவில் வச்சிருக்காங்க. நான் ரொம்ப நாளா இதை உங்ககிட்ட ஷேர் பண்றதுக்கு தயங்கிட்டே இருந்தேன். நீங்க எல்லாரும் அப்பாவுக்காக பிரார்த்தனை பண்ணிக்கிட்டீங்கன்னா அந்த பாசிட்டிவிட்டினால அவங்க சீக்கிரம் சரியாகி வருவாங்கன்னு நான் நம்புறேன்’ என்று தெரிவித்து்ள்ளார்.
‘அப்பா சீக்கிரம் சரியாகி வரணும்! நீங்க எல்லாரும் ப்ரே பண்ணுங்க! நன்றி’ என்று அந்த வீடியோவில் தனது அப்பா நேத்ரனுக்காக அபிநயா ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…