7 Am Headlines today 2024 March 20th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு – தேர்தல் ஆணையம்.
மக்களவை தேர்தல் கூட்டணி: அதிமுக – தேமுதிக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை.
பெண்கள் பாதுகாப்பு பற்றி மணிப்பூர் மாநிலத்தில் பேச முடியுமா டி.ஆர். பாலு கேள்வி.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை 24ம் தேதி அறிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அமமுக, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இன்று பாஜக தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது.
பைக் சாகசம் செய்வோரை சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து.
பழனி கிரிவல பாதையை சுற்றி தடுப்புகளை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக அவகாசம் அளித்தது உயர்நீதிமன்றம். 

இந்தியா: 

தமிழர் பற்றி தவறான பேச்சு – மத்திய அமைச்சர் ஷோபா தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு.
100 நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 நிர்ணயம் செய்யப்படும் – காங்கிரஸ்.
பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்பு – பள்ளி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் ஆணை.
பாஜக கூட்டணியுடனான அதிருப்தியால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா.
நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.
புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்து ஓய்வுபெற்ற தரன் ஜித் சாந்து பாஜகவில் இணைந்தார்.
கர்நாடகா: பிஜாபூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.2 கோடி பணம் பறிமுதல் 

உலகம்: 

இலங்கையில் 2024க்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 214 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு.
காஸாவில் 6 மாதங்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 31,819 பேர் உயிரிழப்பு.
ஊழல்வாதிகள் கண்டிக்கப்படும் முன் தேர்தல் நடத்தும் திட்டமில்லை – ஜப்பான் பிரதமர் உறுதிபாகி.
உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து தீவிரம் – ரஷ்ய எல்லை பெல்கராடில் இருந்து 9000 சிறுவர்கள் வெளியேற்றம்.
காஸாவுக்கு உணவு கொண்டு செல்ல கட்டுப்பாடு – இஸ்ரேலில் போர் உத்தி என ஐ.நா குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிபர் சர்தாரி மகள் அசீபா பூட்டோ வேட்புமனுத் தாக்கல். 

விளையாட்டு:

ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு பெயரும், சீருடையும் மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 சீசனில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து வர்ணனை செய்ய உள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் ஆல்ரவுண்டர் டிரஸ்ஸிங் ரூமில் சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2024: பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என விராட் கோலி நம்பிக்கை

 
 

Published at : 20 Mar 2024 06:59 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link