மக்களவை தேர்தலில் நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா போட்டியிடும் நிலையில், அவரது படங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
தேர்தல் பரப்புரை:
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் தேர்தலானது, வரும் ஜூன் 1 ஆம் தேதி நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு கட்சிகளும், எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை களமிறக்குவது? என்பது குறித்து ஆராய்ந்து வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிமோகா தொகுதியில் நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக நடிகர் சிவராஜ்குமார் தேர்தல் பரப்புரையில் பங்கேற்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.’
படம்: சிவராஜ்குமார் மனைவி கீதா
தடை விதிக்க மனு:
இந்நிலையில், நடிகர் சிவராஜ்குமார் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களை, தேர்தல் முடியும் வரை ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும் என பாஜக-வின் ஓபிசி மோர்ச்சா பிரிவு மனு அளித்துள்ளது.
இதுகுறித்து பாஜக-வின் ஓபிசி மோர்ச்சா பிரிவு தலைவர் கௌடில்யா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “மாநிலத்தின் முக்கிய பிரமுகரும், தற்போது காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் தழுவிய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சிவராஜ் குமார், சினிமா வேலை மற்றும் பொது நபர்களின் மூலம் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளார்” என்று கூறியுள்ளார்.
தேர்தல் களத்தில் சமநிலையை ஏற்படுத்தி தர வேண்டும். அவரது குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்கள், விளம்பரங்கள் அல்லது விளம்பரப் பலகைகளைக் காட்டுவதைத் தவிர்க்க திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா!