7 Am Headlines today 2024 april 9th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் தொடங்கியது – வீடு,வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள், முதியவர்களிடம் வாக்கை பதிவு செய்தனர்
சென்னையில் இன்று பிரதமர் மோடியின் வாகன பேரணி – 5 அடுக்கு பாதுகாப்பு, பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு 
மதுரை, சிவகங்கை தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பரப்புரை 
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு – தமிழ்நாடு முழுவதும் 18,518 சிறப்பு பேருந்துகள் இயக்கம் 
திமுகவும், காங்கிரஸூம் தங்கள் குடும்பத்துக்காக உழைப்பதாக நாமக்கலில் பரப்புரை மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு 
திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு – விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் கால அவகாசம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம் – தவறான தகவல் பரப்புபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட தேர்தல் பரப்புரை – நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு 
தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை – மக்களுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சென்னையில் ஐபிஎல் தொடர் – 7 நாட்களுக்கு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் 
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஏகேஎஸ் அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார்
ஆன்லைன் மூலம் மெட்ரோ ரயிலில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் – பயணிகள் கடும் அவதி 

இந்தியா:

முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகல் – இன்று காங்கிரஸில் இணைகிறார்
தலைமை தேர்தல் ஆணையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கைது
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவிப்பு 
ஆந்திரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மது வழங்கப்படும் – சந்திரபாபு நாயுடு 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு 
சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு
ஏழைகள் வீடு கட்ட அனுப்பிய ரூ.30 ஆயிரம் கோடியை சுருட்ட திரிணாமுல் காங்கிரஸ் திட்டம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு 

உலகம்: 

ரஷியாவில் கனமழையால் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழந்ததால் மக்கள் அவதி
மனைவி மீது பொய்யான குற்றச்சாட்டு – கணவருக்கு 80 கசையடி வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் 
பாலின மாற்று அறுவை சிகிச்சை மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வாடிகன் போப் கருத்து
ராணுவ உளவு செயற்கைக்கோளை 2வது முறையாக ஏவி தென்கொரியா சாதனை 

விளையாட்டு:

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்: இன்று நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் – ஹைதராபாத் அணிகள் மோதல் 
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியில் இருந்து ஹாரி புரூக் விலகல் – மாற்று வீரராக லிசாட் வில்லியம்ஸ் அறிவிப்பு 

Published at : 09 Apr 2024 07:09 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link