இனி யாராலயும் தடுக்க முடியாது! மாநிலங்களவையிலும் மாஸ் காட்டப்போகும் பா.ஜ.க.!

இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று கீழ் சபை என அழைக்கப்படும் மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்:

இரண்டாவது மேல் சபை என அழைக்கப்படும் மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.

கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் பெரும் பங்காற்றிய 12 பேர், குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மாநிலங்களவையில் தற்போது, 5 இடங்கள் காலியாக உள்ளது. குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள ஜம்மு காஷ்மிரில் 4 இடங்களும் ஒரு நியமன இடமும் காலியாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவடைய உள்ளது. அதில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதம் நிறைவு பெறுகிறது.

56 மாநிலங்களவை இடங்களில் 41 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள முடிவுகள் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அசுர பலத்துடன் பாஜக:

240 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் ஐந்து நியமன உறுப்பினர்கள் உள்பட பாஜகவின் பலம் 97ஆக உயர்ந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 117ஆக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழலில், மாநிலங்களவையில் பெரும்பான்மையை பெற 121 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, பெரும்பான்மையை பெற பாஜக கூட்டணிக்கு இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல், மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்து வரும் பாஜகவுக்கு, மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

குறிப்பாக, ஊழல் மற்றும் கருப்பு பணம் தொடர்பான குடியரசு தலைவர் உரையானது எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. 2019ஆம் ஆண்டு வரை, நில சீர்திருத்தம் மற்றும் முத்தலாக் போன்ற சட்டங்களை மத்திய பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இரண்டாவது ஆட்சி காலத்தில்தான், பாஜகவால் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது.

மாநிலங்களவையிலும் பெரும்பான்மை:

2019ஆம் ஆண்டுக்கு பிறகும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் ரத்து போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவின் பலம் கூடுகிறது. மாநிலங்களவை தேர்தலின்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கலும் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால் இரண்டு மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் கூடுதலாக வென்றுள்ளது.

மாநிலங்களவையில் பாஜகவுக்கு மொத்தமாக 97 உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு 29 உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 உறுப்பினர்களும் திமுக, ஆம் ஆத்மி கட்சிக்கு தலா 10 உறுப்பினர்களும் உள்ளனர். பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தலா 9 உறுப்பினர்கள் உள்ளனர். பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கு 7 மாநிலங்களவை உறுப்பினர்களும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.

Source link