pradeep ranganathan love today movie director next 3 movies details


இயக்குநராக அறிமுகமாகி முழு நேர இயக்குநராக மாறியுள்ளார் லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
பிரதீப் ரங்கநாதன்
ஜெயம் ரவி  நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2022ஆம் ஆண்டு இவர் இயக்கிய லவ் டுடே படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் தானே நாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் பிரதீப் ரங்கநாதன். முதல் இரண்டு படங்களிலேயே புகழின் உச்சத்திற்கு சென்ற பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கப் போகும் படம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக இருக்கையில் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் அவர். இந்த மூன்று படங்கள் குறித்த தகவல்கள் இதோ.
எல்.ஐ.சி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் எல்.ஐ.சி . இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைய உள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
சுதா கொங்காரா உதவி இயக்குநரின் படம்
அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதன் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூரரைப் போற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்காராவிடம் கீர்த்தீஸ்வரன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#PradeepRanganathan Lineup ⭐: Looks Promising..🤝• #LICFilm – VigneshShivn – 7Screen• AGS Production – Ashwanth Marimuthu (Oh my Kadavule)• Mythri Movie Makers – Keerthi eeswaran (Debut & Sudha Kongara AD) pic.twitter.com/5eZGWop3aY
— Laxmi Kanth (@iammoviebuff007) April 9, 2024

ஓ மை கடவுளே இயக்குநரின் படம்
எல்.ஐ.சி படத்தைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், வானி போஜன், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இப்படத்தினை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. 

 

மேலும் காண

Source link