தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் இயக்குனர் பாலசந்திரன் சொல்வது என்ன? 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆயுவு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன், “தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மற்றும் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஐந்து இடங்களில் அதிக கனமழையும் 17 இடங்களில் மிக கனமழையும் 55 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சீர்காழி 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு பொறுத்தவரையில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கனமழைக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை செங்கல்பட்டு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தூத்துக்குடி விருதுநகர் நெல்லை தஞ்சை கள்ளக்குறிச்சி சேலம் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை குமரி நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.   
நாளை, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
ஜனவரி 10 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும். 
11 முதல் 13 ஆம் தேதி வரை, தமிழகத்தில்    ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மிதமான – கனமழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
08.01.2024 முதல் 10.01.2024 வரை: தமிழக   கடலோரப்பகுதிகள்,    மன்னார்    வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 

Source link


Latest News

View All

  1. Если запои повторяются регулярно, одного вытрезвления недостаточно. Выведение алкоголя помогает снять острые проявления, но для успешного выздоровления требуется лечение алкоголизма.…

  2. Этот информационный материал подробно освещает проблему наркозависимости, ее причины и последствия. Мы предлагаем информацию о методах лечения, профилактики и поддерживающих…

  3. При легком или умеренном абстинентном синдроме нарколог может провести лечение на дому. Если у пациента появились судороги, психоз, выраженные сердечно-сосудистые…

  4. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Подробнее – https://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/

  5. Запой создает серьезную нагрузку на сердце, сосуды, печень, почки, мозг и нервную систему. Чем дольше пациент употребляет спиртное, тем выше…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed