Haryana government takes action after Mahendragarh bus accident, orders issued to schools


 ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக  விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹரியான மாநிலத்தில் உள்ள Mahendragarh நகரில் உஹானி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 13-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.  
உஹானி லிங்க் சாலையில் இன்று (11.04.2024) காலை பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக விபத்துள்ளானது. பேருந்து அதிக வேகமாக வளைவில் திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், ”பள்ளி பேருந்து ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாகவும் பள்ளி பேருந்திற்கு தர சான்றிதழ் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ரம்ஜான் பொது விடுமுறை நாளில் பள்ளி செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வாகனத்திற்கு ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்க வேண்டும்” என்றும் அம்மாநிலத்தின் போக்குவரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காண

Source link