How A US Couple Used A Lottery Loophole And Math Skills To Win Over Rs 200 Crore | Lottery: வேற லெவல்! லாட்டரியில் கிடைத்த ரூ.200 கோடி! தட்டித் தூக்கிய 80 வயது தம்பதி

ரூ.200 கோடியை தட்டித் தூக்கிய தம்பதி:
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஜெர்ரி (80). இவரது மனைவி மார்ஜ் செல்பீ (81).  இவர்கள் 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் வின்ஃபால் (WinFall) என்ற லாட்டரி விளையாட்டிற்கான விளம்பரத்தை பார்த்துள்ளனர். இதை பார்த்ததும் கணித பிழை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், குறிப்பாக எண்ணிக்கையிலான லாட்டரி டிக்கெட்டை வாங்கினால் பணம் உறுதியாக கிடைக்கும் என்று  நம்பினர். இதனை அடுத்து, லாட்டரியில் முதலீடு செய்த தம்பதி, கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 26 மில்லியன் டாலரை சம்பாதித்துள்ளனர். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.210 கோடி சம்பாதித்துள்ளனர்.
முதலில் 3600 டாலருக்கு லாட்டரி வாங்கி நிலையில், 6300 டாலர் (ரூ.5.2 லட்சம்) கிடைத்திருக்கிறது. அதன்பிறகு, 8000 டாலருக்கு லாட்டரி வாங்கிய நிலையில், ரூ.13 லட்சம் கிடைத்திருக்கிறது. இப்படியே 20 ஆண்டுகளில் முதலீடு செய்து மொத்த 26 மில்லியன் டாலரை (ரூ.210 கோடி) வென்றுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 7 முறை லாட்டரியில் முதலீடு செய்து சம்பாதித்துள்ளனர். 
எப்படி தெரியுமா? விளக்கிய தம்பதி:
குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகை சம்பாதித்தது குறித்து அரசு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை எழுப்பியது.   இதனால், இவரது வருமானத்தை அரசு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், சட்டவிரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகைகைய சம்பாதித்தது குறித்து தம்பதியிடம் கேள்வி எழுப்பினர்.
அவர்கள் கூறுகையில், “வின்பால் என்ற லாட்டரி விளையாட்டிற்கான விளம்பரத்தை பார்த்ததும் அதில், கணித பிழை இருந்தை பார்த்தேன். இதனால், ஈஸியாக சம்பாதிக்கலாம் என்று அறிந்துக் கொண்டோம். 1100 டாலர் முதலீடு செய்து 1100 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினால், அதில் நான்கு வெற்றி எண் இருக்கும். அந்த நான்கு எண் மூலம், 1000 டாலர் கிடைக்கும். அதேபோல, மூன்று எண் வெற்றி டிக்கெட் குறைந்தது 19  கண்டிப்பாக இருக்கும்.
இதன் மூலம் 1900 டாலர்கள் கிடைக்கும்.  இதை ஒரு தொழிலாக தொடர்ந்து, எங்கள் நண்பர்களுக்கு குறிப்பிட்ட லாபத்தை ஒதுக்கி, முதலீடு செய்ய வைத்தோம். இதன் மூலம் லாபமும் எங்களுக்கு கிடைத்தது.  இதன் மூலம் தான் எங்களுக்கு ரூ.210 கோடி சம்பாதித்தோம்.
இந்த தொகையை வைத்து வீட்டை புதுப்பித்தோம், எங்கள் தொழிலுக்கு பயன்படுத்தினோம், எங்களின் ஆறு குழந்தைகள், 14 பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் பயன்படுத்தினோம்” என்று கூறினர். வெஸ்டர்ன் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஜெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க
TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர்கள் மாநாடு – மாவட்ட வாரியான திட்டங்கள் என்ன, தென்தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்..!
TN GIM 2024: உலகம் வியக்கும் மாநாடு, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு, 26.9 லட்சம் வேலைவாய்ப்புகள் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

Source link