IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs CSK IPL Match


ஐபிஎல் 2024ல் நேற்றைய 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  நான்காவது வெற்றியை பத்வு செய்த சென்னை அணியும், நான்காவது தோல்வியை சந்தித்த மும்பை அணியும் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த இடங்களில் இருக்கிறது. 
இந்த வெற்றிக்கு பிறகு சென்னை அணி 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட்  +0.726 உடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த மும்பை அணி 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.234 என எட்டாவது இடத்திற்கு சரிந்தது.
முதல் இடம் யாருக்கு..?
இந்த சீசனில் இதுவரை அதிகபட்சமாக 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த அணியை தொடர்ந்து தலா 8 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து, சன்ராஜர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.344 உடன் நான்காவது இடத்தில் உள்ளது. 
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. லக்னோவின் நிகர ரன் ரேட் +0.038 ஆகவும், குஜராத்தின் நிகர ரன் ரேட் -0.637 ஆகவும் உள்ளது. இதற்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை முறையே தலா 4 புள்ளிகளுடன் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. பஞ்சாபின் நிகர ரன் ரேட் -0.218, மும்பையின் நிகர ரன் ரேட் -0.234 மற்றும் டெல்லி கேபிடல்ஸின் நிகர ரன் ரேட் -0.975. மூன்று அணிகளும் இதுவரை தலா 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி அதாவது 10வது இடத்தில் உள்ளது. பெங்களூரு இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றுள்ளது. 
ஐபிஎல் 2024: சிஎஸ்கே மற்றும் எம்ஐ இடையிலான போட்டிகளுக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற பட்டியலை இங்கே பாருங்கள்..




தரவரிசை


அணிகள்


போட்டிகள்

வெற்றி

தோல்வி


டை


புள்ளிகள்


நிகர ரன் ரேட்




1


ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)


6


5


1


0


10


0.767




2


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)


5


4


1


0


8


1.688




3


சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)


6


4


2


0


8


0.726




4


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)


5


3


2


0


6


0.344




5


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)


6


3


3


0


6


0.038




6


குஜராத் டைட்டன்ஸ் (GT)


6


3


3


0


6


-0.637




7


பஞ்சாப் கிங்ஸ் (PBKS)


6


2


4


0


4


-0.218




8


மும்பை இந்தியன்ஸ் (MI)


6


2


4


0


4


-0.234




9


டெல்லி கேப்பிடல்ஸ் (DC)


6


2


4


0


4


-0.975




10


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)


6


1


5


0


2


-1.124


ஆரஞ்சு கேப்: 
1. விராட் கோலி: 6 போட்டிகள் (319 ரன்கள்)2. ரியான் பராக்: 6 போட்டிகள் (284 ரன்கள்)3. சஞ்சு சாம்சன்: 6 போட்டிகள் (264 ரன்கள்)4. ரோஹித் சர்மா: 6 போட்டிகள் (261 ரன்கள்)5. சுப்மன் கில்: 6 போட்டிகள் (255 ரன்கள்)
பர்பிள் கேப்: 
1. யுஸ்வேந்திர சாஹல்: 6 போட்டிகள் (11 விக்கெட்கள்)2. ஜஸ்பிரித் பும்ரா: 6 போட்டிகள் (10 விக்கெட்டுகள்)3. முஸ்தபிசுர் ரஹ்மான்: 5 போட்டிகள் (10 விக்கெட்கள்)4. ககிசோ ரபாடா: 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள்)5. கலீல் அகமது: 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள்)

மேலும் காண

Source link