Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்


CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில், ஆளுநர்கள் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். மேலும் படிக்க

TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..

நாளை மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயண்ம் மேற்கொள்கிறார். பின் மாலை 5.50 மணியளவில் ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தருகிறார். அங்கு இந்தியா இளைஞர் விளையாட்டு – 2023 ஐ துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 8 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குவார். மேலும் படிக்க


Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;  ராமர் கோயில் வந்தது  பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாடு  வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை  சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார். மேலும் படிக்க

Latest Gold Silver Rate: இரண்டு நாட்களில் ரூ.560 குறைந்தது.. ஒரு சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,780  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,000 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க

 

Source link