Sun tv Ethirneechal serial today episode March 26 promo


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே முடிவுக்கு வராமல் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு தாவி விடுகிறார்கள். இத்தனை நாட்களாக தர்ஷினி காணாமல் போனதை வைத்து கதையை ஓடினார்கள் இப்போது அவள் கல்யாணம், ஜனனியின் தங்கை காதல் விவகாரம் என கதையை திசைத்திருப்பி வந்த நிலையில் தற்போது தர்ஷனையும் தன் கைக்குள் போட்டுக்கொள்ள பிளான் போடுகிறார் குணசேகரன். 
 
 

 
தர்ஷன் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் வர அவர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள். குடித்து விட்டு வந்ததாக சொல்லி அவர்கள் அனைவரின் வீட்டு விலாசம் மற்றும் மற்ற பெற்றோர் குறித்த தகவல்களை விசாரிக்கிறார்கள். சக்தியும் ஜனனியும் அந்தப் பக்கம் வர, போலீசிடம் சக்தி எவ்வளவு சொல்லியும்  போலீஸ் விடுவதாக இல்லை.
தர்ஷனின் அப்பா பற்றி விசாரிக்க குணசேகரன் மகன் என சொல்லவும் போலீஸ் குணசேகரனுக்கு போன் செய்து தகவல் சொல்லி அங்கே வர சொல்கிறார். அனைவருக்கும் முன்னாடி தர்ஷனை அவமானப்படுத்தி பேசி உடன் அழைத்துச் செல்கிறார் குணசேகரன். சப்போர்ட் செய்ய வந்த சக்தியையும் ஜனனியும் கூட அவமானப்படுத்துகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 
 
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
 
சக்தி வந்து நடந்ததை பற்றி ஈஸ்வரியிடம் சொல்ல தர்ஷன் வந்ததும் ஈஸ்வரி அவனை நிற்க வைத்து கேள்வி கேட்கிறாள். “உங்க பேச்சை கேட்டு எங்க அப்பாவை எதிர்த்து நின்றது பெரிய தப்பு. உங்க சுயநலத்துக்காக பெத்த பிள்ளைகளை கூட கொல்ல தயங்க மாட்டாங்க” என ஈஸ்வரியை பார்த்து சொன்னதும் அனைவரும் இப்படி பேசுவது தர்ஷனா என அதிர்ச்சி அடைகிறார்கள். 
 
 

உமையாள் சித்தார்த்தை அழைத்து கொண்டு குணசேகரன் வீட்டுக்கு வருகிறாள். குணசேகரன் அவர்கள் வந்ததும் தர்ஷினியை கூட்டிட்டு வா என சொல்லி ஆர்டர் போடுகிறார். அவர் செய்வது பிடிக்காமல் கோபத்தில் பேசுகிறான் சக்தி “பெரிய பிரச்சைனயா இதை இழுத்து விட்டுருவேன் பாத்துக்கோங்க” என சக்தி சொல்ல ” உன்னால ஆனதை பாருடா” என நக்கலாக சொல்கிறார் குணசேகரன். 
 
“ஒரு பக்கம் தர்ஷினியோட எதிர்காலம், மறுபக்கம் என்னோட தங்கச்சி அஞ்சனாவோட வாழ்க்கை. இதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என சவால் விடுகிறாள் ஜனனி.
 
 

தர்ஷினியை அழைத்து வந்து உட்கார வைக்க அவள் பக்கத்தில் சித்தார்த்தை உட்கார வைக்கிறார்கள். வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் என சொல்கிறார் குணசேகரன். இதை பார்த்து  அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட். 
 
 
 
 

மேலும் காண

Source link