Top News India Today Abp Nadu Morning Top India News January 27 2024 Know Full Details


நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 96 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல் பிரச்சார பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதேபோல் இந்திய கூட்டணி தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் படிக்க.,

இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – 15 நாட்களுக்கான திட்டம் என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார்.  தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின், துபாய் சென்று சுவீடன் சென்றடைகிறார். அங்கிருந்து ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, முக்கிய அரசு அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து இங்கிலாந்து,  ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதலமைச்சர் பயணிக்கவுள்ளார். மேலும் படிக்க.,

ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் இன்று (27.01.2024) மற்றும் நாளை (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே. கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி. திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்திக்கொள்ளவும். மேலும் படிக்க.,

கச்சத்தீவு விழாவில் பங்கேற்க விருப்பமா? பக்தர்கள் பிப்ரவரி 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.  இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். மேலும் படிக்க.,

தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்யம் – வெல்லும் சனநாயக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இப்படை தோற்பின் எப்படை வெல்லும் என்பதைப் போல திருமாவின் படை இங்கு கூடியுள்ளது. மாணவர் திமுகவில் பணியாற்றியதில் இருந்து எனக்கு திருமாவைத் தெரியும். இன்று ஜனநாயகம் காக்கத்தான் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார். அன்றைக்கு திமுகழகத்தில் இருந்து முழங்கினார். மேலும் படிக்க.,

Source link