TN Job Training : தமிழ்நாடு அரசின் சூப்பர் முயற்சி! தொழில்முனைவோருக்கான 3 நாள் பயிற்சி முகாம்! எங்கு, எப்போது?

சென்னையில் 3 நாள் பயிற்சி:

தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. முதலில் யூடியூப் சேனல் உருவாக்கம் பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, ஒவ்வொரு துறையிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி மற்றும் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்ட திட்டங்களும் குறித்த பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

எங்கு, எப்போது நடைபெறுகிறது?

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், கீழ்க்கண்ட பயிற்சிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தொழிற்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி 28.02.2024 முதல்  01.03.2024 9.30 காலை முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.  ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி 29.02.2024 முதல்  02.03.2024 9.30 காலை முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது.

தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புக்கு:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,

சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல்,

சென்னை – 600 032.

044-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022 / 9841336033 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம்.

Source link