சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ள தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ, சீரியல் என எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெரும். வித்தியாசமான கான்செப்டில் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதும், வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவது என தனக்கென ஒரு தனி ஸ்டைலை பாலோ செய்பவர்கள். அதனாலேயே விஜய் டிவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக ப்ரைம் தமிழில் ஒளிபரப்பாகி வந்த குடும்பப் பின்னணி சார்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். பேமிலி ஆடியன்ஸ் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் முதல் சீசன் முடிவடைந்து சமீபத்தில் தான் அதன் இரண்டாவது சீசன் ஆரம்பமானது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” சீரியல் அதே ஸ்லாட்டில் இரவு 8 மணிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, வி.ஜே.கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார், ஹேமா ராஜ் சதீஷ், ஷாலினி, அஜய் ரத்னம் மற்றும் பலர் நடித்து வரும் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்று மகன்களில் கதிர் மற்றும் செந்தில் என கடைசி இரு மகன்களுக்கு திருமணம் எதிர்பாராத விதமாக நடைபெற்றதால் மூத்த மகனான சரவணன் திருமணம் தடைபட்டு வருகிறது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர். பெண் பார்க்கும் படலம் தான் தீவிரமாக கடந்த சில எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சரவணன் ஜோடி யாராக இருக்கும் என ரசிகர்கள் பலமாக யோசனை செய்து வந்தார்கள்.
இந்நிலையில் சரவணனுக்கான ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து நடிப்பில் இறங்கியவர் சரண்யா துராடி. நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட ஏராளமான தொடர்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர். ஒரு சில காலங்களாக சீரியல்கள் எதிலும் நடிக்காமல் இருந்த சரண்யாவுக்கு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் இணைய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மூத்த மகன் சரவணனாக வி.ஜே. கதிர்வேல் கந்தசாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக களமிறங்குகிறார் சரண்யா என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நியூ என்ட்ரியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திற்குள் சந்தோஷம் கூடுமா அல்லது குறையுமா என்பது வரும் எபிசோட்களில் தெரிய வரும். விரைவில் இவர்கள் இருவரும் சந்திக்கும் காட்சிகள் இத்தொடரில் இடம்பெற உள்ளது எனக் கூறப்படுகிறது. சரண்யாவின் என்ட்ரியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் காண