அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு… கமலா ஹாரிஸ் சொன்ன தகவல்….

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் அமெரிக்காவில் வேலையில்லா திட்டாட்டம் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கொரோனா காலத்திற்குப்பிறகு இது மேலும் அதிகரித்த‌தால், பல லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பொறுப்பேற்ற பின்னர், வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் அதிகாரத்திற்கு வந்த‌தில் இருந்து 13 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலையில்லா திண்டாட்டத்தை 4 விழுக்காட்டிற்கும் கீழ் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். ஏராளமான அமெரிக்க்களுக்கு வேலை கிடைத்துள்ளதாகவும், படைன் திட்டம் செயல்படுவதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.