தென் அமெரிக்க நாடான சிலியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிலி, பொலிவியா, அர்ஜெண்டியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் 115 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி காலை 7.20 மணிக்கு 7.1 ரிக்டர் என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.