யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.Do. Creative Labs தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ள வெப் சீரியஸை, இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கவுள்ளார். ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

கோடியில் இருவர் சீரிஸின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் யூடுயூப் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், லைவ் லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை என்ன?

கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பெங்களூர் பயணித்து அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரிஸின் கதை. ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன், நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கலான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்டார்ட் அப் துறை பற்றி வரும் பல தொடர்கள் போல அல்லாமல், அந்த துறையின் பின்னணியை முழுக்க முழுக்க உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லும் வகையில், மிகுந்த ஆராய்ச்சிகள் செய்து, அத்துறை வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த சீரிஸின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு ஒரு முழுமையான சிரீஸில் நடித்திருக்கும் கோபி, சுதாகர் தங்கள் முத்திரை காமெடியில் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரையிலும் பெரிய ஓடிடி தளங்கள் மட்டுமே முயற்சித்து வரும் தரத்தில், முதல் முறையாக யூடுயூப் தளத்திற்காக உட்சகட்ட தரத்தில், இந்த “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெர்வித்துள்ளது.

இந்த சீரிஸில் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக் RV, நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர் (ஓர்ஜுன்), வெட்டிபையன் வெங்கட் & நிறைமதி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பெங்களூருவில் பல JordIndian வீடியோக்களை இயக்கிய ஷாகித் ஆனந்த் இந்த சீரிஸினை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இந்த சீரீஸ் டைட்டில் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

போரிஸ் கென்னத் & ரோஹித் சுப்ரமணியன், டானில்லா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த சீரிஸிக்கு கதை எழுதியுள்ளனர். ரோஹித் சுப்ரமணியன் & போரிஸ் கென்னத் ஆகியோர் வசனங்கள் எழுதியுள்ளனர்.

Do. Creative Labs பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த சீரிஸை, பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler இணைந்து வழங்குகிறது. ஆனந்த் அகல்வாடி, போரிஸ் கென்னத், ரோஹித் சுப்ரமணியன், டான்னிலா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…