ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தார்.  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனை, இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான சாந்தன் என்ற சுதேந்திரராஜா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டார். இலங்கை தமிழரான அவர், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, இலங்கைக்கு சென்று தனது வயதான தாயாரை பார்த்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சாந்தன் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில், இலங்கைக்கு செல்ல, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இதற்கான பயண ஆவணத்தை வழங்கியுள்ளது. ஆனால், இந்த பயண ஆவணம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைதான் செல்லுபடியாகும். எனவே, இலங்கைக்கு சாந்தன் சென்றாலும் அவர் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா திரும்ப வேண்டும். அல்லது பயணத்தை நீட்டிக்க இலங்கை அரசிடம் அனுமதி கோர வேண்டும்.
இந்நிலையில், சாந்தன் கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இலங்கை நாட்டுக்குச் செல்ல, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இலங்கை தூதரகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று கூறப்படுகிறது. 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports