தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். தன்னுடைய அசாத்தியமான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ஃபகத் பாசில் இயக்குநர்களின் விருப்பமான நடிகராக திகழ்கிறார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் கூட நடிக்க தயங்காத ஃபகத் பாசில் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களை எதார்த்தமான நடிப்பின் மூலம் மெருகேற்றுபவர்.
ஹாலிவுட் வாய்ப்பு :
விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ள ஃபகத் பாசில் தற்போது மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு ஆடிஷன் செய்தது குறித்து தெரிவித்துள்ளார். முதல்முறையாக ஹாலிவுட் படத்துக்கு ஆடிஷன் செய்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்.
ஆடிஷனில் என்ன நடந்தது ?
படத்தின் பெயரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பற்றியோ எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் ஆடிஷன் செய்வதற்காக காட்சி ஒன்று கொடுக்கப்பட்டது என்பதை பற்றி மட்டும் கூறி இருந்தார். ஃபகத் பாசில் அந்த வாய்ப்பை ஏற்று கொண்டாரா இல்லையா என்பது குறித்த எந்த ஒரு தகவலும் அவரின் நெருங்கிய வட்டாரத்திற்கு கூட தெரியவில்லை.
நடிகர் ஃபகத் பாசில் அவர் நடிக்கும் படத்தில் கேரக்டர் கொடுத்த பிறகு அதற்கு ஏற்றார்போல மட்டுமே நடிப்பார் என்றும் மற்றபடி நண்பர்கள் முன்னால் கூட நடித்து காட்ட மாட்டார். அவரை நடிக்க வைக்கவும் முடியாது என்பது அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்த ஒரு விஷயம். அப்படி அவரை நடிக்க வைக்க வேண்டும் என்றால் அவர் நடிப்பதற்கான கூடுதல் விவரங்கள் வழங்கப்பட வேண்டும். திரைக்கதைக்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் அவருக்கு கொடுக்கும் கேரக்டரை பொறுத்தே அவரின் நடிப்பு அடங்கும். இந்த சூழலில் அவர் எப்படி ஆடிஷனில் நடித்து காண்பித்தார் என்பது குழப்பமாக இருக்கிறது.
வெற்றியின் உச்சத்தில் ஃபகத் :
ஆரம்ப காலகட்டத்தில் ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்த ஃபகத் பாசில் தற்போது வெற்றியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் ஜீத்து மோகன் இயக்கத்தில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்ததுடன் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
‘ஆவேஷம்’ ரங்கா :
‘ஆவேஷம்’ படத்தில் ரங்கா என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த கேங்ஸ்டராக நடித்து இருந்தார் ஃபகத் பாசில். ரங்கா கேரக்டருக்கு தேவையான ஸ்வாக் மற்றும் ஸ்டைல் கேரளா இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த கேரக்டருக்கு தேவையான பெரும்பாலான குணாதிசயங்களை ஃபகத் தான் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :
தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனை எதிர்த்து பன்வர் சிங் கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான ‘வேட்டையன்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் நஸ்லென் மற்றும் மமிதா நடிப்பில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாவது பாகத்தை ஃபகத் பாசில் தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார் ஃபகத் பாசில் என கூறப்படுகிறது.
மேலும் காண