Lok Sabha Election 2024: நெருங்கும் தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்..

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து கட்சிகளும் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. சென்னையை பொறுத்தவரை 3 தொகுதிகள் அதாவது வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 தொகுதிகள் உள்ளன.

அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். அதற்காக வாக்குப்பதிவு எந்திரம் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் மட்டுமே இடம்பெறும், சென்னையில் அதிக போட்டியாளர்கள் என்பதால் அதிக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தல 3 வாக்குப்பதிவு எந்திரம் தேவைப்படும் என கூறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 3,726 வாக்குச்சாவடி மையங்கள், 944 அமைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் விவிபேட் 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன் இறுதியானதை தொடர்ந்து வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், அவர்களின் பெயர் மற்றும் சின்னம் எந்திரத்தில் பொறுத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெறுகிறது.

இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 18 ஆம் தேதி மாலை எந்த வாக்குப்பதிவு எந்திரம், எந்த இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது பொறுத்து எடுத்துச் செல்லப்படும். வாக்குப்பதிவுக்காக அன்று இரவே வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை தயார்படுத்துவார்கள். பின் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கும்.

Source link