சிறப்பு பேருந்துகள்:

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது, ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26ல் குடியரசு தினம், ஜனவரி 27 சனிக்கிழமை, ஜனவரி 28 ஞாயிற்று கிழமை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

580 சிறப்பு பேருந்துகள்:

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "26/01/2024 குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 25/01/2024 வியாழக்கிழமை முதல் 28/01/2024 ஞாயிறு வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், 24/01/2024 மற்றும் 25/01/2024 அன்று சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடு தலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24.01.2024 மற்றும் 25.01.2024 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 24.01.2024 அன்று 5,722 பயணிகளும் மற்றும் 25.01.2024 அன்று 7,222 பயணிகளும் சென்னையிலிருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்:

ஞாயிறு அன்று 15,669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம் மேலும், 25.01.2024 பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து 10 குளிர்சாதன பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக காலை 10.00 மணி முதல் இயக்கப்பட உள்ளது.

இப்பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்தின் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Now noticing that the post avoided the temptation to be funny in places where humour would have undermined the substance,…
Need a car rental near White Plains Airport (HPН)? Check out the best HPН car rental companies offering premium and…
Частная наркологическая клиника доктора Лазарева эффективно осуществляет лечение зависимости в Санкт-Петербурге с 2008 года. Для каждого пациента составляется индивидуальная программа…
Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Ознакомиться с деталями – https://kapelnitsa-na-domu-v-moskwe5.ru/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘பெண்களை மதிக்கும் பாஜக’: டெல்லி அடக்குமுறையின் போது துன்புறுத்தப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ள அகிலேஷ் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஆளுமை உரிமைகள்: தீர்வு தோல்வியடைந்தால் ஆஜராகுமாறு அமிதாப் பச்சனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எஸ்ஐஆர் பரபரப்பு: டெல்லியில் ‘காஷ்மீர் மாதிரி’, எமர்ஜென்சி போன்ற சூழல், எதிர்க்கட்சிகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பார்லிமென்ட், தெருக்கள் அல்ல, நாட்டை ஆளும்: பா.ஜ.,; அரசாங்கம் திக்குமுக்காடுகிறது, என்கிறார் oppn | இந்தியா செய்திகள் | ACTPnews.com

கட்டுப்படுத்தப்பட்டது, தடுத்து வைக்கப்பட்டது, அடங்கியுள்ளது: கிளாம்டவுன் படலங்கள் கிளறுகின்றன, ஆயிரக்கணக்கானோர் வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர், வழியில் கைது செய்யப்பட்டனர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Первичную оценку проводит нарколог. Специалист уточняет, сколько дней продолжается запой, сколько лет пациент употребляет алкоголь регулярно, имеются ли хронические болезни…