திருப்பதி டூ அயோத்தி: சிறப்பு விமானம் மூலம் ராமருக்கு பெருமாள் அனுப்பிய கிஃப்ட்..

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம சந்திரமூர்த்தி கோயில் திறப்பு விழாவிற்கு ஒரு லட்சம் லட்டுகளை வழங்கியுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

அயோத்தியில் கட்டப்பட்ட வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற திங்களன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) இலவச ஸ்ரீவாரி பிரசாதம் (லட்டு) வழங்கவுள்ளது. இதற்காக சுமார் ஒரு லட்சம் லட்டுகளை அயோத்திக்கு அனுப்பப்பட்டன. இத லட்டுகள் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டன.

வருகின்ற திங்கட்கிழமையன்று அயோத்தி முழுவதும் ஸ்ரீ ராம ஜெயம் என்று ஒலிக்கும்போது, ராமஜென்மபூனி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் வழங்கப்பட இருக்கிறது.  லட்டுகள் அனுப்பப்பட்டது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜேஇஓ வீரபிரம்மன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ ஸ்ரீராமர் மற்றும் திருப்பதியில் குடிகொண்டிருக்கும் வெங்கடேஸ்வர சுவாமி ஆகிய இருவரும் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்கள். வரலாற்று சிறப்புமிக்க திருப்பதி லட்டுகளை ஒரு லட்சம் திருப்பதி லட்டுகளை விநியோகிக்க தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி மற்றும் இஓ ஏ.வி.தர்ம ரெட்டி தலைமையிலான எங்கள் அறக்கட்டளை முடிவு செய்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் சமையல் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் சுமார் 350 ஸ்ரீவாரி சேவகர்கள் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ஒரு லட்சம் லட்டுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நிலையில், ராமர் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக அவை மிகவும் கவனமாக பேக் செய்யப்படும். ஒவ்வொரு லட்டுவும் சுமார் 25 கிராம் எடை கொண்டது. இதை தொடர்ந்து, திருமலையில் இருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏரோ குழுமத்தின் உதவியுடன் சிறப்பு சரக்கு விமானம் மூலம் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டது. இது வருகின்ற 22ம் தேதி அயோத்தியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது” என்றார்.

கோயில் திறப்பு விழாவிற்கு சுமார் 8,000 திரைப்பட, அரசியல் மற்றும் முக்கிய நிறுவன தலைவர்களுக்கு அறக்கட்டளை அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. தொடக்க விழாவிற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பிரமல் குழுமத் தலைவர் அஜய் பிரமல், மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி லட்டு:

திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் வெங்கடேஸ்வரருக்கு வழங்கப்படும் பிரசாதமாகும். இது மாவு, சர்க்கரை, நெய், எண்ணெய், ஏலக்காய் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஏழு மலைகளைக் கொண்ட இந்தியாவின் பணக்காரக் கோயில்களில் ஒன்றான திருப்பதியை தரிசிக்க உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதே அளவு ஸ்ரீவாரி லட்டுவும் உலகம் முழுவதும் பிரபலமானது. ஏழுமலையான் தரிசனத்திற்குப் பிறகு இந்த லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

Source link