இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். 
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணிக்கு சிறப்பான முதல் இன்னிங்ஸ் அமைய காரணமாக இருந்தார். ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் விளாசி 209 ரன்கள் சேர்த்து அமர்க்களப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் சேர்த்தது. 
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 3 வீக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் சேர்த்த நிலையில் ஆல் அவுட் ஆனதால், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை 143 ரன்கள் முன்னிலையில் தொடங்கியது. 
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சுப்மன் கில் சதம் விளாசி இந்திய அணி சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயிக்க காரணமாக இருந்தார். சுப்மன் கில் 147 பந்துகளில் 11 பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 104 ரன்கள் குவித்தார். அதேபோல் இந்திய அணியின் அக்‌ஷர் பட்டேல் 84 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் விளாசியதுடன் 45 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 398 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் நெருக்கடியான பந்து வீச்சுக்கு மத்தியிலும் சிறப்பாக விளையாடியது. இங்கிலாந்து அணி சார்பில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி தங்களது தோல்வி வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர, இந்தியாவின் வெற்றி வாய்ப்பினை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி இறுதியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்த போட்டியில் இந்திய அணியின் பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியது. முதல் இன்னிங்ஸில் விக்கெட் எதுவும் கைப்பற்றாத அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 499 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

Source link