தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா (Upasana) CSR அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவராகவும், URLife துணைத் தலைவருமாக பதவியில் இருந்து வருகிறார். வேலை செய்யும் தாய்மார்கள் சந்திக்கும் சவால் குறித்து சமீபத்தில் பேசி இருந்தார்.
ராம் சரண் – உபாசனா கொனிடேலா திருமணம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் தான் அவர்களின் முதல் குழந்தையை பெற்றேடுத்தனர். இந்நிலையில், “ஒரு தாயாக இருப்பவர் வெவ்வேறு கதாபாத்திரங்களை மேற்கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு பெண்கள் பணியில் இருந்து விலகுவதும், தாயான பிறகு பிரவசத்திற்காக பணியில் தடை ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. பெண்கள் தாயாகவும் அதே நேரத்தில் பணி இடத்தில் சிறந்து விலகுவதும் ஒரு ஈஸியான விஷயம் இல்லை. அது உண்மையிலேயே ஒரு போர். முன்பு இருந்ததை போல திறம்பட செயல்பட முடியவில்லை என்றாலும் முடிந்த அளவு சிறந்து செயல்பட முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் “பெண்களுக்கு வசதியாக இருக்கும்படியாக கார்ப்பரேட் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். பெண்கள் வேலைக்கு செல்லும் இடங்கள் வசதியாக இருப்பதை உறுதி செய்தல் அவசியம். அதற்கான பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறேன். அதே போல பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை காட்டிலும் தங்களுக்கென ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு சுதந்திர உணர்வைக் கொடுக்கும், பாக்கெட் மணியில் வாழ வேண்டிய அவசியமில்லை. மேலும் பெண்கள் தங்களின் கருமுட்டைகளை சேமிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
உபாசனா மற்றும் ராம் சரண் தம்பதியினர் தங்களுக்கென ஒரு வசதியான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பிறகு தான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, அதன்படியே பெற்றுக்கொண்டதை பெருமையாக கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தானாபதி ஜோடியாக குஜராத் ஜாம்நகரில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக அம்பானி குடும்பத்திற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
“ஆனந்த், ராதிகா மற்றும் ஒட்டுமொத்த அம்பானி குடும்பத்திற்கும் வாழ்த்துகள். நீதா ஜி, முகேஷ் ஜி உங்களின் விருந்தோம்பல் ஈடு இணையற்றது. நன்றி. அற்புதமான மனிதர்களுடன் அற்புதமாக நேரம் செலவு செய்தோம்” என தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்து இருந்தார் உபாசனா கொனிடேலா.
மேலும் காண