7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு முழுவதும் மதக் கலவரங்கள் உருவாகும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காங்கிரஸ் அரசு சாத்தியப்படுத்திய பல திட்டங்களில்தான் மோடி அரசு ஓடிக்கொண்டிருக்கிறது – ப.சிதம்பரம்.
பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை அவதூறாகப் பேசினால் எப்படி பொறுமையாக இருப்போம் – செல்லூர் ராஜூ.
3வது முறை மோடி பிரதமரானால் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி அமலாகும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் உதயநிதி.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கிறது – திருமாவளவன்.
மோடி தமிழகம் வந்தால் திமுக கூட்டணி கட்சிகளுக்குதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் – மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்.
தமிழ்நாட்டில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை.
வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவிப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.

இந்தியா:

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ விசாரணை.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடுக்கு பாஜகதான் காரணம் – சஞ்சய் சிங் எம்பி குற்றச்சாட்டு.
பாஜகவுக்கு எப்போதும் பயங்கரவாத தொடர்பு இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி.
பாரதிய ஜனதா கட்சியின் துணை நிறுவனமா தேர்தல் ஆணையம் – டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கேள்வி.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
அடுத்தாண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும் – மன்சுக் மாண்டவியா.
வாக்குப்பதிவு குறைந்த நகரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் – இந்திய தேர்தல் ஆணையம்.
அசாம் மாநிலம் சில்சாரில் 21 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே மின் விநியோக நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து. 

உலகம்: 

ஆஸ்திரேலியாவில் தொடரும் கனமழை: மோசமான வானிலை காரணமாக 100 விமானங்கள் ரத்து.
அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு.
தாய்லாந்து சுற்றுலா பயணிகள் சென்ற படகில் தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ஈரானில் பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர மோதல் – 28 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி.
ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு. ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவிப்பு.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல்ஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. 

Published at : 06 Apr 2024 07:03 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link