School Timing: உறையவைக்கும் கடும் குளிர்; பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்: முழு விபரம் உள்ளே!

குளிர் காலநிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நர்சரி முதல் 8 வரையிலான வகுப்புகள் ஜனவரி 18 முதல் காலை 10 மணிக்கு தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என கவுதம் புத்த நகரின் முதல் நிலைக் கல்வி அலுவலரான மாவட்ட ஆட்சியர் ராகுல் பன்வார் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நேர மாற்றம் தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்"அடர்த்தியான மூடுபனி மற்றும் கடும் குளிரைக் கருத்தில் கொண்டு, கவுதம புத்த நகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அனைத்து பள்ளிகளிலும் நர்சரி முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் ஜனவரி 18 முதல் மறு உத்தரவு வரும் வரை காலை 10 மணி முதல் தொடங்கும். பள்ளி நேர மாற்றம் தொடர்பான உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிகவும் கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு முன்னதாக,  நெய்டாவில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக நர்சரி முதல் 8ஆம் வகுப்பு  வரையிலான வகுப்புகள் ஜனவரி 16 வரை விடுப்பு அளிக்கப்பட்டது.  9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பள்ளி நேரங்கள் கடந்த வாரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாற்றியமைக்கப்பட்டு, மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் பிறப்பித்த தனி உத்தரவின்படி பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்த உத்தரவானது அதாவது, 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த நேரம் ஜனவரி 20 ஆம் தேதி வரை தொடரும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள அரசுப் பள்ளிகள் பொதுவாக குளிர்காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கால அட்டவணையைப் பின்பற்றுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சமீப காலமாக காலநிலை மாற்றம்  மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த புரிதல்களும் அதையொட்டிய நடவடிக்கைகளையும் கணிசமான அளவு பார்க்க முடிகின்றது. தற்போது இந்தியாவில் குளிர் காலம் என்றாலும், வரலாறு காணத குளிரினால் பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தியாவில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் சமீப காலமாக கடும் வெயில் மற்றும் கடும் குளிருக்கு பள்ளிகள் விடுமுறை விடுவது என்பது கால நிலை மாற்றத்தின் எதிரொலியாகப் பார்க்கப்படுகின்றது. கால நிலை மாற்றத்தினால் எவ்வளவு காலத்திற்கு பள்ளிகளை இயக்கும் நேரத்தினை மாற்றி அமைக்கப்போகின்றோம் என்ற கேள்வியை பெற்றோர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.

Source link