இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் (Bazball) பாணி ஆட்டம் தான். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாகவும், ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பெறுப்பேற்றதில் இருந்து அந்த தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதற்கான காரணம் பாஸ்பால் எனப்படும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிப்போம் என்று நாசர் ஹுசைன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர்.

இந்தியாவில் பாஸ்பால் பாணி எடுபடாது:

இச்சூழலில், இங்கிலாந்து அணியின் பாஸ்பால் பாணி ஆட்டம் இந்தியாவில் எடுபடாது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ பாஸ்பால் முறை இத்தொடரில் வேலை செய்யாது. ஏனெனில் சூழ்நிலைகள் இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. குறிப்பாக இந்தியாவில் முதல் பந்திலிருந்தே பந்து சுழல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்.

அதை 2 அணியை சேர்ந்த ஸ்பின்னர்களும் நன்றாக பயன்படுத்துவார்கள். அது போன்ற மைதானங்களில் டாஸ் என்பது வெற்றியில் முக்கிய பங்காற்ற கூடியதாக இருக்கும். எனவே இந்த தொடரில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமையாமல் போனால் மட்டுமே இங்கிலாந்து தாங்கள் நினைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்கி வெற்றி காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்… பெங்களூரு புல்ஸ் அசத்தல் வெற்றி

மேலும் படிக்க: Sania Mirza: திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த சோயப் மாலிக்? கவலையில் மூழ்கிய சானியா மிர்சா! நடந்தது என்ன?

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
online casino bij hoogeveen zonder registratie 2026
uitbetalende casinos Feel free to visit my site :: casino betalen met revolut (https://dev5.myvtd.site)
Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг системных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. В третьем сегменте…
nieuwe online poker Here is my web-site :: Beste Casino Site Nederland Met Gratis Spins
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

’திமுக எம்.எல்.ஏ-க்கள் கார் வாங்க மறுத்ததற்கு இதுதான் காரணம்.!’ – செங்கோட்டையன் சொன்ன விளக்கம் | ACTPnews.com

‘ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவின் பிராந்தியம்’ – ட்ரம்ப் அதிரடி பேச்சு!|‘American Territory’: Trump’s Big Claim on Strait of Hormuz | ACTPnews.com

மாவட்டம் முதல் கிளை வரை மாற்றம் – திமுகவில் என்ன நடக்கிறது?|New Rules in DMK: Two-Term Cap, Age Limits for Leaders | ACTPnews.com

‘இந்தியாவிலேயே எங்கும் 'இது' நடந்திருக்காது; தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்' – பெ.சண்முகம் | ACTPnews.com

gokkasten met wild symbool Have a look at my webpage … casino no deposit bonus [Renaidglobal.com]