Rathasaptami day Kanchipuram Varadaraja Perumal Surya Prabhai Vahanam and crawled through the streets – TNN


ரதசப்தமி தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சூரிய பிரபை
 
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ  பாவ காரியங்கள்  செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதம் என்பதாகும். தை முதல் நாள்  தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள்  திதி ரத சப்தமியாகக்  கொண்டாடுகிறோம்.

 
மணவாள மாமுனி மற்றும் ராமானுஜர் சன்னதி
 
அவ்வகையில் இன்று அத்திவரதர் புகழ்பெற்ற காட்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ரதசப்தமி நிகழ்வையொட்டி  ஸ்ரீ வரதராஜ பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கி சிறப்பு மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனி மற்றும் ராமானுஜர் சன்னதி வழியாக திருக்கோயில் ராஜகோபுரம் அருகே எழுந்தருளி சிறப்பு தீபாரதம் நடைபெற்று பக்தர்களுக்கு சடாரி ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
 

ரதசப்தமி விழா
 
ரதசப்தமி விழாவை பற்றி காஞ்சி வரதராஜ பெருமாளின் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலில் திருக்கோவிலில் குவிந்தனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வைணவ தளங்களில், இன்று ரதசப்தமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 
 
அத்தி வரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது . ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவியவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன. மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.

இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர் காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக கோவில் விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது.

மேலும் காண

Source link