வேளச்சேரியில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு காட்சி…

சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளச்சேரி முத்துகிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்று தகவல் வெளியாகவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.