Cant Wait For New Season: Fans Cant Keep Calm As MS Dhoni Hints At New Role In CSK Ahead Of IPL 2024

ஐ.பி.எல் 2024:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சூழலில் இன்னும் ஒரு சில நாட்களில் சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர்.
அதன் பிறகு பயிற்சியை தொடங்க இருக்கின்றனர். முதல் கட்டமாக சி.எஸ்.கே கேப்டனான எம்.எஸ்.தோனி அடுத்த வாரம் தொடக்கத்தில் சென்னைக்கு வர உள்ளார். சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார். தோனி எப்போது சென்னை வருவார், அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

MS Dhoni’s Facebook post. – The lion is ready to roar….!!! 🦁 pic.twitter.com/ZX5aU3z9Ej
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 4, 2024


முன்னதாக இந்த முறை நடைபெறும் ஐ.பி.எல் தொடர் தான் தோனி விளையாடும் கடைசி தொடர் என்று கூறப்பட்டது. முன்னதாக எம்.எஸ்.தோனி சமூக வலைதளங்களில் இருந்தாலும் அவ்வளவு ஆக்டிவ்வாக இருப்பது இல்லை. இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
தோனி வெளியிட்ட முக்கிய பதிவு:

இந்நிலையில் தான் எம்.எஸ்.தோனி சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று (மார்ச் 4) வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய சீசன் மற்றும் புதிய ‘பாத்திரத்திற்காக’ காத்திருக்க முடியாது. காத்திருங்கள்!”என்று கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்காத தோனி திடீரென சமூக வலைதளத்தில் ரசிகர்களை காத்திருங்கள் என்று கூறியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 

Source link