IPL 2024 SunRisers Hyderabad Unveil New Jersey See Pic SRH New Jersey 2024 | SRH New Jersey: புதிய ஜெர்சியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய ஜெர்சி:
முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டார். பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024ஆம் ஆண்டு ஐபிஎல்லுக்கான மினி ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால் ஐ.பி.எல். ஏலத்தில் 20 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை போன முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இச்சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் மற்ற ஐ.பி.எல் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 

Ready to unleash the fiery heat of Hyderabad 🔥Our 🆕 blazing armour for #IPL2024 🧡 #PlayWithFire pic.twitter.com/mMQ5SMQH6O
— SunRisers Hyderabad (@SunRisers) March 7, 2024

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்த நிலையில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளபக்கத்தில் புவனேஷ்வர் குமார் புதிய ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தற்போது சன்ரைசர்ஸ் அணியின் புதிய ஜெர்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு இந்த ஜெர்சி மாற்றம் கை கொடுக்குமா? என்பது போன்ற கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
 
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 
 
 

மேலும் காண

Source link