தனுஷின் ராயன் படத்தை திரையரங்கில் செல்போனில் படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, திரையரங்கில் முதல் காட்சியை ரெக்கார்ட் செய்து, இணையத்தில் வெளியிடுவது தொடர்கதையாகியுள்ளது. அதனை தடுக்க திரைத்துறையினரும், காவல்துறையினரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை இந்த கும்பலை தடுக்க முடியவில்லை. எப்பேர்பட்ட நடிகர் படமாக இருந்தாலும், முதல் காட்சி வெளியான அடுத்த சில நிமிடங்களில், முழு படமும் இணையத்தில் வெளியாகிவிடுகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் திரைப்படமும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.அந்த படத்தையும் இணையத்தில் வெளியாகிவிடுமோ என்று, படக்குழுவினர் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சூழலில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏரிஸ்ப்ளக்ஸ் திரையங்கில் ராயன் திரைப்படம் வெளியானது. அதனை பார்க்க வந்த மதுரையை சேர்ந்த ஸ்டீபன் என்பவர், செல்போனில் படம் பிடித்துள்ளார். இதைப்பார்த்த திரையரங்கு உரிமையாளர், போலீசுக்கு தகவல் அளித்தார்.
விரைந்து சென்ற போலீசார், செல்போனில் படத்தை ரெக்கார்ட் செய்துகொண்டிருந்த ஸ்டீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…