சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
”ரவி வருவானு எனக்குத் தோணல” என விஜயா சொல்கிறார். அப்போது ரோகிணி “ஆண்டி கவலைப்படாதீங்க ரவி கண்டிப்பா வருவாரு” என சொல்கிறார். முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா, “நீங்க ஸ்ருதியின் அப்பாவை அடித்தது தவறு” எனக் கூறி சண்டைப் போடுகிறார். “இப்போ ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு வருவாங்களானே தெரியலையே” என்கிறார் மீனா. “உனக்காக தானே சண்டை போட்டேன்” என்கிறார் முத்து. “என்னால சாப்பிடாமலாம் போக முடியாது. இப்போ சாப்டலாமா, இல்லை நான் குடிக்கப் போகவா?” என முத்து கேட்கிறார். பின் ஹோட்டலில் சாப்பிடுகின்றனர்.
”ரெடியாகு வீட்டுக்கு கெளம்பலாம்” என ரவி ஸ்ருதியிடம் சொல்கிறார். ஆனால் ஸ்ருதி வர மறுக்கிறார். ”இப்போ என்ன அந்த வீட்ல முத்து மட்டும் தான் இருக்கானா?” என ரவி கேட்கிறார். அதற்கு ”அவரும் அந்த வீட்ல தானே இருக்காரு” என ஸ்ருதி சொல்கிறார். ”உங்க அப்பாவும் மீனா அண்ணிய அப்டி சொல்லி இருக்கக் கூடாது இல்ல” என ரவி சொல்கிறார்.
”வாயால பேசத் தெரியாதா உங்க அண்ணனுக்கு? ஒரு எல்டர் பர்சன அடிச்சி இருக்காரு” என ஸ்ருதி சொல்கிறார். ”இப்போ எங்க அப்பா ஃபோன் பண்ணாரு. நம்மள வர சொன்னாரு” என ரவி சொல்கிறார். ”கூப்டா நீ போ” என ஸ்ருதி சொல்கிறார். ”எல்லாத்தையும் ஈசியாலாம் என்னால மறக்க முடியாது” என ஸ்ருதி சொல்கிறார். ரவி வீட்டிற்கு புறப்படும்போது ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் ரவின் மனதை மாற்றி போக விடாமல் செய்கின்றனர்.
முத்துவும் மீனாவும் வீட்டுக்குள் வரக்கூடாது என விஜயா சொல்கிறார். விஜயா முத்துவை பயங்கரமாகத் திட்டுகிறார். மனோஜ் ”உனக்கு ஆரம்பத்துல இருந்தே அவர் மேல கோபம் இருந்து இருக்கு சான்ஸ் கிடச்ச உடனே அடிச்சிட்ட” என சொல்கிறார். ”கண்ணு முன்னாடி என் பொண்டாட்டி பத்தி பேசுனா நான் பார்த்துக்குட்டு சும்மா இருக்கணுமாப்பா” என முத்து அண்ணாமலையிடம் கேட்கிறார்.
”இனி அவங்க ரெண்டு பேருக்கும் இங்க இடம் கிடையாது. அவங்கள வெளியே போகச் சொல்லுங்க” என விஜயா சொல்லுகிறார். ”இவங்க இந்த வீட்ல இருந்தா இங்க நிம்மதியே இருக்காது” என விஜயா சொல்கிறார். அதற்கு முத்து ”இப்போ நாங்க போகணும் அவ்ளோ தானே மீனா? நீ போய் ட்ரெஸ்ஸ எல்லாம் எடுத்துட்டு வா” என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் காண