Pooja Hegde who fell in love lucky letter for vijay cinema headlines | cinema Headlines:விஜய்க்கு எந்த எழுத்து ராசி தெரியுமா? காதலில் விழுந்த பூஜா ஹெக்டே?


Puspa 2 Teaser: ரசிகர்களே! அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 டீசர் எப்போது ரிலீஸ்? இதுதான் தேதி!
புஷ்பா படத்தின் இரண்டாம் பகுதி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் வரும் ஏப்ரல் 8 -ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஆக்ஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.மேலும் படிக்க
Vijayakumar: அடுத்தடுத்து சினிமாவில் கால் பதிக்கும் விஜயகுமார் பேரன்கள்.. சந்தோஷத்தில் வனிதா!
வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி, இயக்குநர் ஹரியின் மகன் ஸ்ரீ ராம் ஹரி. மிக பெரிய திரை குடும்பத்தின் வாரிசுகளான இவர்கள் இருவரும் அடுத்த தலைமுறையில் இருந்து திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.மேலும் படிக்க
Pooja Hegde: காதலில் விழுந்த பூஜா ஹெக்டே? சல்மான் கான் இல்லை, ஆனால் வேறு பாலிவுட் நடிகருடன் உலா!
பூஜாவும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் டேட் செய்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் முன்னதாகத் தகவல்கள் பரவின. சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவுடன் காரில் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக மீண்டும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படிக்க
Vijay Deverakonda: வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய விஜய் தேவரகொண்டா.. அவருக்கு அவரே கொடுத்த தண்டனை!
ஃபேமிலி ஸ்டார் படத்துக்கான ப்ரோமோஷன் ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “​​’லைகர்’ படத்தின் தோல்வி குறித்தும் , பாக்ஸ் ஆபிஸில் படத்தின் ரிசல்ட்டிற்குப் பிறகு அவர் எப்படி உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்கள்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு, ஒரு சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அது என்னவென்று கேட்டால், அடுத்த 3 படங்களின் வெளியீட்டுக்கு முன்  அதன் முடிவுகளைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்துள்ளேன்” என விஜய் தேவரகொண்டா பதிலளித்தார். மேலும் படிக்க
Thalapathy Vijay: அஜித்துக்கு “V” எழுத்து ராசி.. அப்ப விஜய்க்கு எந்த எழுத்து ராசி தெரியுமா?
நடிகர் விஜய்யின் படங்களில் இருக்கும் டைட்டில் ரகசியம் ஒன்றை நடிகர் சதீஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். “பைரவா” படத்துக்கு டைட்டில் வைப்பதற்கு முன் ஏராளமான டைட்டில்களை தான் விஜய்யிடம் கூறினேன். அதேசமயம் விஜய்க்கு என சில சென்டிமென்ட் உண்டு என்பதையும் நான் கண்டுபிடித்தேன். அதாவது “I” என ஆங்கிலத்தில் முடியும்படி டைட்டில் வந்தால் அந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்து விடும் என்றார். மேலும் படிக்க
 

மேலும் காண

Source link