பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்யாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநர் என்ன செய்கிறார் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொன்முடியை அமைச்சராக்க தமிழ்நாடு அரசு சார்பாக பரிந்துரைத்த போதிலும், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பாக ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடியை அமைச்சராக பதவி பிராமாணம் செய்ய மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது யார் என கேள்வி எழுப்பினர்.
மேலும் காண